தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள்; இயற்கை மருத்துவம், யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்கிற விதி: உயர் நீதிமன்றம் இடைக்கால தடை 

By செய்திப்பிரிவு

தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி தேர்வுக்குழு, கொள்கை விளக்க குறிப்பேட்டை வெளியிட்டது.

அதில், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படிப்புக்கு விண்ணப்பித்து, கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி வீரலட்சுமியிடம், டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் இருந்து தகுதிச்சான்று பெற்று சமர்ப்பிக்கும்படி, கோவை தனியார் கல்லூரி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கொள்கை விளக்க குறிப்பேட்டில், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள், இப்படிப்பில் சேர தகுதியில்லை எனத் தெரிவித்துள்ளதால், பல்கலைக்கழகம், தகுதிச் சான்று தராது எனக் கூறி, சம்பந்தப்பட்ட விதியை செல்லாது என அறிவிக்க கோரி வீரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 2019-20ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது, இதுபோன்ற விதி கொண்டு வரப்பட்ட போது, அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததாகவும், டில்லி உயர் நீதிமன்றம், இந்த விதியை ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, *தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் (NIOS) படித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற கொள்கை விளக்க குறிப்பேட்டு விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

* தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம்

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling) (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.

1989 ஆம் ஆண்டு இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை இலகுவான வழியில் சாமானியர்கள் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் உயர்நிலை (10) மற்றும் மேல் நிலை(12) தேர்வுகளை நடத்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்