திருப்பூரில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கடைகள்: சீல் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 368 இறைச்சி கடைகளில் 26 கடைகள் எந்த அனுமதியுமின்றி, ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருவதாகவும், அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவில் குறிப்பிட்டுள்ள 26 கடைகள் மட்டுமல்லாமல், மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், திருப்பூர் மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்