ஏலகிரி மலையில் உள்ள ராமகிருஷ்ணா மடம் சார்பில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட ரூ.56 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முன்னி லையில் நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு நேற்று வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ராமகிருஷ்ணா மடம் இயங்கி வருகிறது. இந்த மடம் சார்பில் பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரோனா பெருந்தொற்று காலத்தில் பொது மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பில் 25 படுக்கைகள், போர்வைகள், தலையணைகள் வழங்கப் பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, நாட்றாம் பள்ளி அரசு மருத்துவ மனையில் கரோனா நோயாளிகள் பயன்பாட்டுக்காக ஏலகிரி ராமகிருஷ்ணா மடம் மற்றும் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் இணைந்து ரூ.56 லட்சம் மதிப்பில் 70 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இலவசமாக வழங்க முன்வந்தன.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முன்னி லையில் ஏலகிரி ராம கிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி பாவரூபானந்தா, தனியார் மென்பொருள் நிறுவனத்தின் இயக் குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் 70 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஒப்படைத்தனர்.
இதில், 35 ஆக்சிஜன் செறிவூட்டிகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும், 35 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கும் பிரித்து வழங்கப்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
இதையடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தேவையான நவீன வென்டிலேட்டர் கருவிகள் மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என ராமகிருஷ்ணா மடத்தின் நிறுவனத் தினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago