சென்னையில் காணொலிக் காட்சியில் மாநகராட்சி மருத்துவர்களிடம் 2,693 பேர் ஆலோசனை: ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,693 நபர்கள் GCC Vidmed மற்றும் வாட்ஸ் அப் காணொலிக் காட்சி வாயிலாக, மாநகராட்சி மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர் என, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 08) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரையோ (அ) மருத்துவமனைகளுக்கோ செல்வதற்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இச்செயலியின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் (Video Call) 24 மணி நேரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், கரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ள நபர்கள் இச்செயலி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறும்பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர் கேட்டறிந்து அவருக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். கோவிட் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் GCC Vidmed செயலியின் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்களுக்குக் காணொலிக் காட்சி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க கூடுதலாக 94983 46510 / 94983 46511 / 94983 46512 / 94983 46513 / 94983 46514 வாட்ஸ் அப் தொலைபேசி எண்களும் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஏப்ரல் 2021 முதல் 07.06.2021 வரை GCC Vidmed செயலியின் மூலம் 1702 நபர்களும், வாட்ஸ் அப் எண்களின் மூலம் 991 நபர்களும் காணொலிக் காட்சி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களில் கோவிட் தொற்று அறிகுறியுடன் இருந்த 105 நபர்களுக்கு ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என, ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்