தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து, கிருமி நாசினி, முகக்கவசம், பிபிஇ கிட், கையுறை உள்ளிட்டவற்றை வெளியில் அதிக அளவில் ஆளாளுக்கு விற்பதாக புகார் வந்துள்ளதால் இவற்றை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து, தமிழக அரசே விலையையும் நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா முதல் அலை, அதைத் தொடர்ந்து இரண்டாவது அலை பரவல் காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததும் நிகழ்ந்தது. இன்றும் தொற்று எண்ணிக்கை தினசரி 20,000 என்கிற அளவிலும், உயிரிழப்பு 350க்கு மேலாகவும் உள்ளது.
கரோனா பரவல் அதிகரித்ததும் பொதுமக்களிடையே முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை போன்ற பொருட்களின் பயன்பாடு அதிகரித்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் சாதாரண முகக்கவசத்தை 10 ரூபாய்க்கும், என்.95 முகக்கவசத்தை 150 ரூபாய் வரையிலும், கிருமி நாசினியை 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்தனர். பின்னர் அரசு தலையீட்டின் பேரில் விலைகள் கட்டுக்குள் வந்தன.
ஆனாலும், தற்போது வரை இவற்றுக்கு முறையான விலை இல்லை. தற்போதுள்ள நிலையில் தேவை, பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு விலையைக் கண்டபடி ஏற்றி விற்பது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்திற்குத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்ததால் தற்போது முகக்கவசம், கிருமி நாசினி, பிபிஇ கிட், கையுறை உள்ளிட்ட 15 பொருட்களுக்கு அரசே விலையையும் நிர்ணயித்துள்ளது.
» திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டுத் தற்கொலை: பிறந்த நாளில் சோகம்
» பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: கண்ணகி நகரில் 6 பேர் கைது
இதுகுறித்து அரசாணை இன்று வெளியானது. அதில் தமிழக அரசு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மூலமாக 15 பொருட்கள் தமிழ்நாடு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கான சில்லறை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
15 அத்தியாவசியப் பொருட்களின் விலை விவரம்:
1. N95 முகக்கவசம் ஒன்று - ரூ.22.00
2. கிருமிநாசினி 200 மி.லி.- ரூ.110.00
3. கையுறை பரிசோதிப்பது 1 செட் - ரூ.5.75
4. கையுறை (ஸ்டெரைல்) 1 செட்- ரூ.15.00
5. முகக்கவசம் (2 அடுக்கு) - ரூ.3.00
6. முகக்கவசம் (3 அடுக்கு) - ரூ.4.00
7. அறுவை சிகிச்சை முகக்கவசம் (பேப்ரிக் கோட்) - ரூ.4.50
8. ஒருமுறை பயன்படுத்தும் உடல் கவசம் - ரூ.12.00
9. அறுவை சிகிச்சை கவுன் - ரூ.65.00
10. மறு உருவாக்க முகக்கவசம் - ரூ.80.00
11. ஆக்சிஜன் முகக்கவசம் - ரூ.54.00
12. பல்ஸ் ஆக்சி மீட்டர் - ரூ.1500.00
13. ஃப்லோ மீட்டர் - ரூ.1520.00
14. முகத்தை மூடும் ஷீல்டு கவசம் - ரூ.21.00
15. பிபிஇ கிட் - ரூ.273.00
இவ்வாறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago