திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டுத் தற்கொலை: பிறந்த நாளில் சோகம்

By செய்திப்பிரிவு

குடும்பப் பிரச்சினை காரணமாக திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது பிறந்த நாளில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரது தற்கொலை குறித்து, கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞராகவும், திமுகவின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருபவர் தமிழன் பிரச்சன்னா (41). சென்னை, எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்குப் பகுதியில் வசிக்கிறார். இவரது மனைவி நதியா (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் வீட்டில் மாமனாருடன் தமிழன் பிரசன்னா வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த நதியாவின் அறை நீண்ட நேரமாகத் திறக்காமல் இருந்ததால் காலை 10 மணி அளவில் கணவர் தமிழன் பிரசன்னா அறையை உடைத்து உள்ளே பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் நதியா இருந்துள்ளார். உடனடியாக சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். நதியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டது.

மகளின் தற்கொலை குறித்து தந்தை ரவி, கொடுங்கையூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் சிஆர்பிசி 174-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கணவர் தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், “மனைவி நதியாவிற்கு இன்று பிறந்த நாள். தனது பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி முகநூலில் பதிவிட வேண்டுமெனக் கேட்டார். கரோனா காலம் என்பதால் அடுத்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடலாம் எனத் தெரிவித்தேன். இதனால் கோபமடைந்த நதியா என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு நேற்றிரவு முதல் மன விரக்தியில் இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

நதியாவின் மரணத்துக்கான காரணம் குறித்து தந்தை உள்ளிட்ட மற்ற உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்த நாளிலேயே நதியா தற்கொலை செய்துகொண்டது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்