தமிழகத்தில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று 46 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவும் மாற்றப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் வருமாறு:

1. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய பிரிவு எஸ்.பி ஆக பதவி வகிக்கும் பொன்னி மாற்றப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை எஸ்.பி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. மதுரை மாவட்ட எஸ்.பி.சுஜித்குமார் மாற்றப்பட்டு போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. காத்திருப்போர் பட்டியலில் இருந்த மதுரை எஸ்.பி துரை மாற்றப்பட்டு சென்னை ஏ.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7 பட்டாலியன் கமாண்டன்ட் ஜி.சம்பத்குமார் மாற்றப்பட்டு சென்னை காவலர் நலன் ஏஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக பதவி வகிக்கும் சாந்தி மாற்றப்பட்டு மாநில மனித உரிமை ஆணைய சென்னை எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. நெல்லை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் மகேஷ்குமார் மாற்றப்பட்டு சேலம் அமலாக்கப் பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி தீபா சத்தியன் மாற்றப்பட்டு சென்னை ரயில்வே காவல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. விருதுநகர் மாவட்ட எஸ்.பி பெருமாள் மாற்றப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி ஆக பதவி வகிக்கும் சிவகுமார் மாற்றப்பட்டு சென்னை போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. மதுரை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சுகுமாரன் மாற்றப்பட்டு கடலோர பாதுகாப்பு விசாரணை பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சண்முகப்பிரியா மாற்றப்பட்டு சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்பி- 1 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி சுப்புலட்சுமி மதுவிலக்கு குற்றங்கங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. கடல் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு எஸ்.பி அசோக்குமார் மாற்றப்பட்டு அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு, சென்னை எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. நீலகிரி மாவட்ட எஸ்.பியாக பதவி வகிக்கும் பாண்டியராஜன் மாற்றப்பட்டு போச்சம்பள்ளி த.நா.சி.காவல்படை 8-வது பிரிவு கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. மதுரை தலைமையிட துணை ஆணையர் பாஸ்கரன் மாற்றப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை புலனாய்வு பிரிவு எஸ்.பி, கிங்ஸ்லின் மாற்றப்பட்டு சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. சென்னை காவல் ஆணையரக தலைமையிட துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மாற்றப்பட்டு திருச்சி ரயில்வே எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

18. விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு சென்னை ஆவடி த.நா.சி.காவல்படை 5-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெத்து விஜயன் சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக பதவி வகித்த குணசேகரன் மாற்றப்பட்டு நாகப்பட்டினம் கடலோர காவல் குழும எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பதவி வகித்த எம்.சந்திரசேகரன் மாற்றப்பட்டு வேலூர் 15-வது பட்டாலியன் த.நா.சிறப்பு காவல்படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

22. சென்னை மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி தங்கவேலு மாற்றப்பட்டு சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு-2 எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. சென்னை ரயில்வே காவல் எஸ்.பி பழனிகுமார் மாற்றப்பட்டு வணிகம் சார்ந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

24. சென்னை தலைமையிட மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பியாக பதவிக்கும் ஸ்டாலின் மாற்றப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு சென்னை எஸ்.பி டி.பி.சுரேஷ்குமார் மாற்றப்பட்டு பூந்தமல்லி 8-வது பட்டாலியன் த.நா.சிறப்பு காவல் படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

26. வேலூர் 15-ஆவது த.நா.சிறப்பு காவல்படை பட்டாலியன் கமாண்டன்ட் டி.செந்தில்குமார் மாற்றப்பட்டு புதுடில்லி 8-பட்டாலியன் த.நா.சிறப்பு காவல்படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்