சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, 60 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: திருநங் கைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு அங்கீகாரம் அளித்தி டும் வகையில் தமிழக அரசு திருநங்கைகள் நல வாரியம் அமைத் துள்ளது. அதன்மூலம் திருநங்கை கள் சுய உதவிக் குழுவினருக்கு 25 சதவீதம் அரசு மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன், 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு 60 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சொ.ரேவதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கா.ஜேஸ்மின் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago