சிவகங்கை நகராட்சி ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்காததால் பாதுகாப்பின்றி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து வருகின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு 83 நிரந்தர பணியாளர்கள், 75 தற்காலிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மேலும் சிவகங்கை நகராட்சியில் பாதாளச் சாக்கடை பணி முடிவடைந்தும், ஆங்காங்கே அடைப்பு இருப்பதால், கழிவுநீர் வெளியேற்றுவதில் சிக்கல் உள்ளது.
இதனால் ஏற்கனவே இருந்த வெளிப்புற கால்வாய்களிலேயே கழிவுநீர் விடப்பட்டு வருகிறது. ஆனால் கால்வாய்கள் முழுவதும் ஆங்காங்கே மண், குப்பையால் அடைபட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் கழிவுநீருடன் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இதையடுத்து நேற்று கால்வாய் அடைப்புகளை 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சரிசெய்தனர். இதில் ஒருசிலர் மட்டுமே கையுறை, முகக்கவசம் அணிந்திருந்தானர். ஆனால் யாரும் ஷீ அணியவில்லை.
ஆனால் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு கவசமின்றி கழிவுநீர் கால்வாயை சீர் செய்ய கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘ மாதத்தில் 3 முறை மட்டுமே தலா ஒரு முகக்கவசம், கையுறை வழங்குகின்றனர். அவற்றை ஒன்றிரண்டு முறை மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
அதேபோல் ஷூ-ம் ஆண்டுக்கு ஒருமுறை வழங்குகின்றனர். அதுவும் சில மாதங்களிலேயே அறுந்துவிடுகிறது. கை கழுவுவதற்கான சோப்பு மாதந்தோறும் தர வேண்டும். ஆனால் 6 மாதங்களாக தரவில்லை,’ என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago