ஊரடங்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு, தளர்வுகள் என்ன?- முழு விவரம்

By செய்திப்பிரிவு

மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் தொடர்கிறது, மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் என்னென்ன முழு விவரம்.

‘இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:

முழு ஊரடங்கு ஜூன் 7 முதல் ஜூன் 14 காலை 6 மணிவரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் கட்டுப்பாடு தொடர்கிறது. அதேசமயம் இதர மாவட்டங்களில் நோய்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்தவெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை நிறுவனங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

*இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் டோக்கன்கள் மட்டும் கொடுத்து பதிவுகள் செய்ய அனுமதிக்கப்படும்.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

*தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை பணிவுடன் அனுமதிக்கப்படும்.

*மின் பணியாளர் நம்பர்கள் கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

* மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் 6 மணி முதல் 5 மணி வரை செயல்படும்.

* கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

* வாகன விநியோகிப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவு உதவியுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு நபர்களும் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

பொது

நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர பணிகள் காரணமாக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

* கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்கும் மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவீத பணியாளர்கள் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

* தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனம் மூலம் மக்களுக்கு காய்கறி பழங்களை விற்பனை செய்யப்படுவது பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குமாறும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

* நோய்த்தொற்றை கட்டுபடுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதை கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்.

கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளப்படி முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு/ கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தால் கட்டாயம் பின்பற்றுவோம்.

*நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டவுடன் பொதுமக்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்