தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூன் 7 முதல் ஜூன் 14 காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது பல மாவட்டங்களில் கரோனா கட்டுக்குள் வந்த போதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.
» சர்வாதிகாரமாக நடக்கின்றன சமூக வலைதள நிறுவனங்கள்: ‘சோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிறப்புப் பேட்டி
» கரோனா தடுப்பில் அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தலைமையில் குழு
எனவே இம்மாவட்டங்களில் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்களுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
* தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள், காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* காய்கறி பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
*மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
*இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
* அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50% டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் நோய்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.
* தனியாக செயல்படுகின்ற மளிகை பொருட்கள் காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .
* கல்லூரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: விரைவில் அமலுக்கு வருகிறது.
* காய்கறி பழம் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும். மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
* அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50 சதவீதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளுடன் அனுமதிக்கப்படும்.
* மின் பணியாளர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
* மின் பொருட்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* ஹார்ட்வேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதிக்கப்படும்.
* கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாகன விபத்தில் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மற்றும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
* வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டேக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.
* நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
* கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின் ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும் மாதிரிகள் அனுப்புவதற்காக மற்றும் 10% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
* தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டும். இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago