பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு காய்கறி லாரியில் கடத்தப்பட்ட 2,640 மதுபாட்டில்கள் பறிமுதல்: தானிப்பாடி காவல் துறையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தண்டராம்பட்டு அருகே பெங்களூரு வில் இருந்து தி.மலைக்கு காய்கறி ஏற்றி வந்த லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 2,640 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள் ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி ஏற்றி வரும் சரக்கு லாரிகளில், அந்த மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுபான பாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இதனால் கர்நாடக மாநிலத்தை யொட்டி உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதன் அண்டை மாவட்டமான தி.மலை மாவட் டத்தில் வாகன தணிக்கை தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களை சோதனை செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதில், காய்கறி மூட்டைகளுக்கு நடுவே, மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூர் பகுதியில் தானிப்பாடி காவல்துறையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப் போது, பெங்களூருவில் இருந்து தி.மலை நோக்கி காய்கறி மூட்டை களை ஏற்றி வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து 2,640 மதுபான பாட்டிகளை 59 அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுகுறித்து தானிப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தண்டராம்பட்டு அடுத்த டி.வேளூர் கிராமத்தில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ஆனந்தனை(33) கைது செய்தனர். மேலும், 2,640 மதுபான பாட்டில் கள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆரணியில் 219 மதுபாட்டில்கள் பறிமுதல்

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கூட்டுச்சாலையில் ஆரணி கிராமிய காவல்துறையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டபோது, கர்நாடக மாநிலத்தில் இருந்து 219 மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாதப்பன், சூளகிரியைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 219 மதுபான பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்