தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்புத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள 555 குறிப்பிடப்பட்டுள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மே 28-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் http://www.tnhealth.tn.gov.in என்ற இணைப்பில் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் முழுமையான வடிவத்தில் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 'சென்னை – 600106 அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசியர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர்' என்ற முகவரிக்கு, 15.06.2021 அன்று மாலை 5 மணிக்கு முன்னதாகக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், காலதாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள், எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, அவ்வாறு தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதுமிருந்து பலர் விண்ணப்பித்து வந்த நிலையில், இன்று (ஜூன் 04) நிர்வாகக் காரணங்களுக்காக வேலைவாய்ப்புத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பித்த பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago