மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.2000 கரோனா உதவித்தொகை: அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

மூன்றாம் பாலினத்தவருக்கு கரோனா நிவாரண உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், "கரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவி தொகையாக 4000 ரூபாய் வழங்க முடிவு செய்து முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் குடும்ப அட்டை வைத்திருந்த 2956 திருநங்கைகளுக்கும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடும்ப அட்டை இல்லாத தங்களுக்கும் வழங்க வேண்டும் என திருநங்கைகள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் ,விடுபட்ட திருநங்கைகளுக்கும் நிதி உதவி வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து ஏற்கனவே குடும்ப அட்டை உள்ள திருநங்கைகள் 2956 பேருக்கு நிதி வழங்கியது போக எஞ்சிய 8493 திருநங்கைகளுக்கும் நிதி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

8493 திருநங்கைகளுக்கு தலா 2000 ரூ வழங்க 1 கோடியே 69 லட்சத்து 86 ஆயிரம் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்