நிதியில்லாததால் புதுச்சேரியில் தள்ளிபோகும் கரோனா நிவாரணம்

By செ. ஞானபிரகாஷ்

போதிய நிதியில்லாததால் புதுச்சேரியில் கரோனா நிவாரணம் மக்களுக்கு கிடைப்பது தள்ளிபோகிறது.

புதுச்சேரியில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்துக்கும் ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த மே 26ம் தேதிஅறிவித்தார்.

ஒட்டுமொத்தமாக புதுவையில் உள்ள மூன்றரை லட்சம் ரேஷன்கார்டுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்க ரூ.105 கோடி தேவைப்படும். நிதி தட்டுப்பாட்டால் நிவாரண தொகையை 2 தவணையாக அளிக்க முடிவு செய்யப்பட்டது.

முதல் தவணை தொகை ரூ.ஆயிரத்து 500 வழங்க அரசுக்கு ரூ.52.50 கோடி நிதி தேவை. இத்தொகை ஜூன் தொடக்கத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை நிவாரணம் வராததால் மக்கள் அதிருப்தி அடைய துவங்கினர். இதுபற்றி அரசு தரப்பில் விசாரித்தபோது, "கரோனா ஊரடங்கு காரணமாக அரசின் வருவாயில் பெருமளவு சரிவு ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு அதிக வருவாய் தரும் கலால்துறையின் வருவாய் முற்றிலுமாக இல்லை. மத்திய அரசிடம் இருந்து துறைவாரியாக கேட்டுப்பெற வேண்டிய நிதியும் முழுமையான அரசு அமையாததால் கிடைக்கவில்லை.

தற்போதைய நிலவரப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மட்டுமே நிதி உள்ளது. நிவாரணம் வழங்க நிதியில்லை.

அடுத்து வரும் நாட்களில் வரும் வரி வருவாய் மூலம்தான் நிவாரணம் அளிக்க முடியும். போதிய நிதி கிடைத்து, நிதித்துறை ஒப்புதல் கிடைத்த பின்னர்தான் கரோனா நிவாரணம் அளிப்பதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்படும்.

அதன்பின் பயனாளிகளின் வங்கி கணக்கில் முதல்கட்ட நிவாரண தொகை ரூ.ஆயிரத்து 500 செலுத்தப்படும். இதனால் இன்னும் காலதாமதமாகும்" என்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்