ஜூன் 12 மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 03) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதல்வர் முன்னதாக இம்மாதம் நீர்வளத் துறை அமைச்சர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் துறை அமைச்சர், வோளாண்மைத் துறை செயலாளர் ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணையின் தற்போதைய நீர்மட்டம், டெல்டா பாசன விவசாயிகளின் தேவை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார்.
» தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» சிறை பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக கருதி தடுப்பூசியில் முன்னுரிமை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு, 3-6-2021 அன்று நிலவரப்படி 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 டிஎம்சி ஆகவும் உள்ளது. நடப்பாண்டு (2021-2022) தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் (2.11 லட்சம் ஹெக்டேர்) நிலங்கள் பாசன வசதிபெறும்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை விவசாய பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து, இந்தாண்டு முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க இயலும். இவ்வாண்டு விவசாயப் பணிகளுக்குத் தேவையான விதை நெல், உரங்கள், பூச்சி மருந்து மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago