அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் சார்பில் உபகரணங்கள் வழங்கல்

By பெ.பாரதி

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் சார்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக மக்களை கரோனா நோயிலிருந்து காக்கும் பொருட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னார்வலர்கள், நிறுவனங்கள், அலுவலர்கள், தனி நபர்கள் அரசுக்கு நன்கொடை வழங்கலாம் என்றும், ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள், மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்குத் தேவையான முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கலாம் எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, பலரும் தங்களால் முடிந்த உதவிகளை அரசுக்குச் செய்து வருகின்றனர். அதேபோல், பலரும் அப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே, அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் சார்பில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள், 8,330 ஜோடி கையுறைகள், 1,100 முதியோர் டயப்பர்கள், 1,000 போர்வைகள் மற்றும் தலையணை உறைகள் என, ரூ.10 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை ஆட்சியர் த.ரத்னாவிடம் நேற்று (ஜூன் 01) வழங்கினர். உபகரணங்கள் வழங்கிய நபர்களை ஆட்சியர் பாராட்டினார். மேலும், இதுபோலப் பலரும் உதவி செய்ய முன்வர வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், இந்தோனேசியா தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் வெங்டேஸ்வர், மணிமாறன், மயில்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்