கரோனா ஊரடங்கு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் காரணமாக மின்சார தேவை அதிகரித்தது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் முழுமையாக மின் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. இதனால் மின்சார தேவை குறைந்துள்ளது. அதேநேரத்தில்
» பாலியல் வழக்கு: ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் விசாரிக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவு
» கரூர் மாவட்டத்தில் டோக்கன், ரேஷன் பொருட்கள் வழங்கப்படாததால் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்
கடந்த சில நாட்களாக காற்று நன்றாக வீசுவதால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின்சார உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தியது.
அதன்பேரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 1, 2, 3 மற்றும் 4 ஆகிய 4 அலகுகளிலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 5-வது அலகு மட்டும் தற்போது இயங்கி வருகிறது.
மின் தேவை குறைவு காரணமாகவே 4 அலகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின் தேவை அதிகரிக்கும் போது அரசின் அறிவுரை படி இந்த அலகுகள் மீண்டும் இயக்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago