மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயர்த்த மீனவர் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்

By கி.மகாராஜன்

தமிழகத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடை கால நிவாரண நிதியை ரூ.8 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என தமிழக மீனவர் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் சி.சே.ராஜன் கூறியதாவது:

தமிழகத்தில் ஏப்ரல் 15 தொடங்கி ஜூன் 15 வரையும் கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையும் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்களும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க முடியாது.

இதுபோன்ற எந்த தொழிலுக்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு தடை விதிப்பதில்லை.

இந்த தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. தற்போது மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையாகத் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ.8 ஆயிரமாகவும், மழைக்கால நிவாரணத்தை ரூ. 6 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஆட்சியில் வழங்குவது போல் ரூ.5 ஆயிரம் தான் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணமாக ரூ.8000 வழங்க வேண்டும். மீனவர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கரோனா நிவாரண நிதியும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்