திருப்பத்தூரில் 391 பேர் கரோனாவால் பாதிப்பு: நோய்ப் பரவல் படிப்படியாகக் குறைகிறது

By ந. சரவணன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 391 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 22,800 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை தவிர 3,982 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சையில் குணமடைந்து 587 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தைக் காட்டிலும் நோய் பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு நல்ல பலன் அளித்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களின் ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசி 5,474 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 109 பேருக்கு போடப்பட்டுள்ளது. நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப் பகுதிகளிலேயே அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடித்தால் அடுத்த வாரத்தில் நோய்ப் பரவல் மேலும் குறைந்து விடும் என்றும், தற்போதை நிலையில் நோய் பரவலும் குறைந்துள்ளதாகவும், உயிரிழப்பு நிகழ்வுகளும் அதிக அளவில் இல்லை, ஆக்சிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்