செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இரண்டாவது அலகில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கி பயன்பாட்டுக்கு இன்னும் ஓரிரண்டு நாட்களில் வந்துவிடும் என நெல்லையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 298 நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு நெல்லை பாளையங்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை எம்.பி ஞான திரவியம் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லை மாவட்டத்தில் இருக்கும் நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளொன்றிற்கு நெல்லை மாவட்டத்தில் 5000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு தற்போதைய நிலவரப்படி 9,000 பேர் வரை தடுப்பூசி செலுத்த முன்வந்து இருப்பதாக தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருவதாகவும் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நெல்லை மாவட்டத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் கொரனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24% த்திலிருந்து 13% மாக குறைந்துள்ளது.நெல்லை மாவட்டத்தில் நோய்தொற்று பாதிக்கப்ப கர்பினிபெண்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒருங்கிணைந்து தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே இயக்குவது தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார் எனவும் நேரடியாக சென்று தொழில் வர்த்தக துறை அமைச்சரை சந்தித்து செங்கல்பட்டு தடுப்பு மையம் தொடர்பாக கடிதம் அளிக்கப்பட்டது.
10 நாட்களுக்குள் மையத்தை இயக்குவது தொடர்பாக பதில் அளிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்த நிலையில் அவர்களது பதிலை தமிழக அரசு எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை இரண்டாவது அலகில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பட்சத்தில் 24 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு கிடைத்தால் தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் பூர்த்தியாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் எட்டு ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்று விரைவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
அதன்பின் அவர் ரெட்டியார்பட்டி யிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கான கோவிட் பராமரிப்பு மையத்தையும் பார்வையிட்டார் .அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் , சிகிச்சைகள், பராமரிப்பு முறைகள் பற்றியும் மருத்துவர்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago