செட்டிநாட்டு அரசரின் வாரிசு டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி தலை சிறந்த கல்வியாளர், சாதனைத் தொழிலதிபர், சமூக சேவகர், ஆன்மிகவாதி, தமிழிசை ஆர்வ லர், சிறந்த விளையாட்டு வீரர் என பன்முகத்தன்மை கொண்டு திகழ்ந்தவர்.
செட்டிநாட்டு அரசர் குடும்பத் தில் மூன்றாம் தலைமுறை வாரிசு எம்.ஏ.எம்.ராமசாமி. 30.09.1931-ல் செட்டிநாட்டில் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கும் மெய்யம்மை ஆச்சிக்கும் மகனாகப் பிறந்தவர். இவரது ஐயா (தாத்தா) ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆற்றிய சமூக சேவைக்காக பிரிட்டிஷ் அர சாங்கத்தால் ராவ் பகதூர் மற்றும் திவான் பகதூர் பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைவதற் காக, அங்கு தாங்கள் நடத்தி வந்த மீனாட்சி கல்லூரி மற்றும் அது சார்ந்த கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய சுமார் 600 ஏக்கர் நிலத்தையும் ரூ.20 லட்சம் ரொக்கத்தையும் வழங்கினார் அண்ணாமலை செட்டியார். இதற் காக அவருக்கு பரம்பரை ராஜா சர் பட்டத்தை வழங்கிய பிரிட் டிஷ் அரசு, “அவருக்கு அடுத் தடுத்த தலைமுறையில் வரும் மூத்த ஆண் வாரிசுகளும் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தர்களாக இருக்கலாம்” என்ற சட்டப்படியான அங்கீகாரத்தையும் வழங்கியது.
இதன்படிதான் அண்ணாமலைச் செட்டியாரின் வழி வந்த மூத்த ஆண் வாரிசுகள் செட்டிநாட்டுக் குடும்பத்தின் பரம்பரை ராஜாக்க ளாகவும் இணைவேந்தர்களாகவும் தொடர்ந்தனர். 2013-ல் தமிழக அரசு அண்ணாமலை பல்கலை. நிர்வாகத்தை சிறப்புச் சட்டத்தின் மூலம் கையகப்படுத்தியதால் இணைவேந்தர் பதவியை இழந்தார் எம்.ஏ.எம். 15.06.1948-ல் அண்ணாமலைச் செட்டியார் இறந்த பிறகு அவரது மூத்த மகன் முத்தையா செட்டியார் செட்டிநாட்டு குடும்பத்தின் அரசரானார். அவ ருக்கு 2 மகன்கள். மூத்தவர் குமார ராஜா எம்.ஏ.எம்.முத்தையா செட்டி யார், இரண்டாமவர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார்.
எம்.ஏ.எம்.முத்தையா செட்டி யார் தனது நாற்பதாவது வயதி லேயே நோய்வாய்ப்பட்டு இறந்தார். 1984-ல் தந்தையார் முத்தையா செட்டியாரும் இறந்து விடவே, அதுமுதல் செட்டிநாட்டு அரச ராகவும் அண்ணாமலை பல்கலை. இணைவேந்தராகவும் அங்கீகரிக் கப்பட்டார் எம்.ஏ.எம்.ராமசாமி. சர்ச் பார்க் கான்வென்ட், சாந்தோம் உயர் நிலைப்பள்ளி மற்றும் மைலாப் பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளி களில் பள்ளிப் படிப்பை முடித்த எம்.ஏ.எம்., சென்னை விவே கானந்தா கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்த கையோடு தொழி லில் இறங்கிவிட்டார். பிறகு, அண்ணாமலை, அழகப்பா, புதுச் சேரி பல்கலைக்கழகங்களில் முது முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
1962-ல் செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தைத் தொடங்கிய ஏ.முத்தையா செட்டி யார் அதில் தனது மகன்கள் எம்.ஏ.எம்.முத்தையாவையும் எம்.ஏ.எம்.ராமசாமியையும் இணை நிர்வாக இயக்குநர்களாக அமர்த்தினார். விளையாட்டுப் போக்காய் தொழில்துறையில் கால்பதித்த எம்.ஏ.எம்., அதில் இறங் கிய பிறகு அசுர வேகத்தில் ஓட ஆரம்பித்தார்.
இரண்டே ஆண்டுகளில் வெளி நாடுகளில் இருந்து நவீன இயந் திரங்களை இறக்குமதி செய்து சிமென்ட் கார்ப்பரேஷனை முன்னணி நிறுவனமாக மாற்றினார் எம்.ஏ.எம்.ராமசாமி. இப்போது சிமென்ட் தொடங்கி தகவல் தொழில்நுட்பம் வரை கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட துணை நிறு வனங்களைக் கொண்டு வளர்ந்து நிற்கிறது செட்டிநாடு குழுமம்.
கல்லூரி நாட்களில் எம்.ஏ.எம்.ராமசாமி சிறந்த டென்னிஸ் வீரர். 1974-80-ல் இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவ ராக இருந்தவர். 1975-ல் கோலாலம் பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் இவர் தலைமையில் சென்ற இந்திய ஹாக்கி அணி உலகக் கோப் பையை வென்றது. இதற்காக அப் போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால் நேரில் அழைத்துப் பாராட்டப்பட்டார் எம்.ஏ.எம்.
இதேபோல், 1980-ல் மாஸ் கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் இவர் தலைமையில் இயங்கிய இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு டென்னிஸ் அசோசி யேஷனின் தலைமை புரவலர், இண்டர்நேஷனல் ஹாக்கி கூட்ட மைப்பின் துணைத் தலைவர், தமிழ்நாடு கிரிக்கெட் மற்றும் கால்பந்து அசோசியேஷன்களின் புரவலர், தமிழ்நாடு கோல்ஃப் அசோசியேஷன் தலைவர் உள் ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்தவர் எம்.ஏ.எம்.
1971-ல் சவுத் இண்டியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இண்டஸ்டிரீ வைர விழா ஆண்டு கொண்டாடியபோது அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஏ.எம். அடுத்த முறையும் அந்தப் பதவிக்குத் தேர்வானார். சென்னை ரேஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு கிளப்களில் தலைவ ராகவும் இருந்தவர், 2 முறை சென்னை செரீஃப்பாகவும் இருந் தார். அண்ணன் முத்தையா செட்டி யார்தான் இவருக்கு குதிரைப் பந்தயத்தில் நாட்டம் ஏற்படுத்தி யவர்.
1964-ல் ’சில்வர் ஜெட்’ என்ற பந்தயக் குதிரையை ராஜா நாகூர் கனி என்பவரிடமிருந்து எம்.ஏ.எம்-மிற்கு அவரது அண்ணன் வாங்கிக் கொடுத்தார். அடுத்த ஆண்டே அந்தக் குதிரை பெங்களூருவில் நடைபெற்ற உலக அளவிலான குதிரைகள் கலந்துகொள்ளும் கிளாசிக்கல் பிரிவில் முதலாவதாக வந்தது. அதுதான் குதிரைப் பந்தயத்தில் எம்.ஏ.எம். அடைந்த முதல் வெற்றி. 1983-ல் ‘க்யூன் ஆஃப் தி ஹில்ஸ்’ என்ற குதிரை மைசூரில் நூறாவது கிளாசிக்கல் வெற்றியைப் பெற்று எம்.ஏ.எம்-மின் பெயரை கின்னஸில் பதிய வைத் தது. கடந்த அக்டோபர் 30-ல் பெங்களூருவில் நடந்த ரேஸில் அவரது குதிரை 600-வது கிளாசிக் கல் கோப்பையை வென்றது.
குதிரைப் பந்தயங்களில் பங்கெடுப்பது மட்டுமின்றி உலகப் பிரசித்தி பெற்ற குதிரைகளை இறக்குமதி செய்து அவற்றின் மூலம் வீரியம் கொண்ட குதிரை வகைகளை உருவாக்குவதிலும் கைதேர்ந்தவராய் இருந்தார் எம்.ஏ.எம். இதற்காகவே சோழவரம் அருகே பல நூறு ஏக்கரில் குதிரைத் தொட்டியையும் அமைத்தார். இப்போது இவருக்குச் சொந்தமாக சுமார் 600 குதிரைகள் உள்ளன.
தமிழிசையை வளர்ப்பதிலும் பல்துறை வல்லுநர்களை ஊக்குவிப் பதிலும் செட்டிநாட்டு அரசர் குடும் பத்தினர் தொடர்ந்து அரும்பணி ஆற்றி வந்திருக்கிறார்கள். அந்தப் பணியை சற்றும் தொய்வில்லாமல் செய்துவந்தார் எம்.ஏ.எம். வறியவர் களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அறக்கட்டளை களைத் தொடங்கி அதன் மூலம் சென்னையில் பள்ளிகளை நடத்தி வருகிறது செட்டிநாட்டு அரசர் குடும்பம். தனது தந்தையாரால் எழுப்பப்பட்ட மதுரை ராஜா முத்தையா மன்றத்தை தனது காலத்தில் முழுமையாக கட்டி முடித்து அங்கே தமிழிசைச் சங்கத்தை நிறுவினார் எம்.ஏ.எம்.
தனது ஐயா, தந்தையார், தாயார், அண்ணன் ஆகியோரின் பிறந்த நாளை வருடம்தோறும் கொண் டாடி வந்தவர், அந்த விழாக்களின் போது பல்துறைகளில் சாதித்தவர் களுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக் கப் பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தி வந்தார். மேலும், ஏழைப் பிள்ளை களின் கல்விக்காகவும் ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் உதவித் தொகைகளை வழங்கி வந்த எம்.ஏ.எம்., தனக்குப் பிறகும் இந்த சேவைகள் தடைபடாமல் நடக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருக்கிறார்.
நேரடி அரசியலில் எப்போதும் ஈடுபட்டதில்லை என்றபோதும் தனது நண்பர் விஜய்மல்லையாவின் விருப்பப்படி, 2004-ல் கர்நாட காவிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வானார் எம்.ஏ.எம். ஐயப்ப பக்தரான இவர் 1981-ல் ஆர்.ஏ.புரத் தில் அரண்மனை வளாகத்துக்கு அருகே சபரிமலை ஐயப்பன் கோயிலைப் போலவே ஐயப் பனுக்கு கோயிலையும் கட்டினார்.
1973-லிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வதையும் வழக்க மாக வைத்திருந்தார். இவரது உதவி யால் தமிழகத்தின் பல இடங்களில் கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழக்கு விழாக்கள் கண்டன. 1999-ல் சிதம்பரம் அண்ணாமலை நகரிலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார். இவரது ஆன்மிக சேவைகளை பாராட்டும் விதமாக ‘பக்த பூஷனம்’ என்ற விருதை வழங்கியது சிருங்கேரி சாரதா பீடம். இவரது பிற சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருதை 2004-ல் காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கி னார்.
சென்னையில் உள்ள செட்டி நாட்டு அரண்மனையின் கீழ்த்தளத் தில் உள்ள ஹாலில் எம்.ஏ.எம்-மின் முன்னோர்கள் மற்றும் மனைவி யின் உருவப் படங்கள் வைக்கப் பட்டுள்ளன. காலையில் தினமும் இந்தப் படங்களுக்கு பூ போட்டு வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அம்மான் (மாமா) மகள் பள்ளத்தூர் சிகப்பி ஆச்சிக்கும் எம்.ஏ.எம்-மிற்கும் 1951 பிப்ரவரி 6-ல் திருமணம் நடைபெற்றது. 40 ஆண்டுகள் கடந்த பிறகும் குழந்தை பாக்கியம் இல்லாததால் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்த சேக்கப்பச் செட்டியாரின் மகன் ஐயப்பனை 1996-ல் சுவீகாரம் எடுத்தார் எம்.ஏ.எம்.
ஒரே பிரிவுக்குள் சுவீகாரம் எடுக் காமல் குல வழக்கத்தை மீறி, மருமகனாக வரவேண்டியவரை மகனாக பிள்ளை கூட்டுகிறார் என்று அப்போதே சமுதாயத்தில் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அவரையே சுவீகாரம் எடுத்தார் எம்.ஏ.எம். 2006-ல் மனைவி சிகப்பி ஆச்சி திடீரென இறந்தபோது மீளாத் துயரில் இடிந்துபோனார் எம்.ஏ.எம். அதிலிருந்தே உறவுகள் அறுந்த நிலையில் தனிமரமானார். அரண் மனைக்குள் நடந்த விரும்பத் தகாத செயல்கள் அவரது உடலையும் மனதையும் வெகுவாகப் பாதித்தது.
இதையடுத்து, குல வழக்கப்படி ஐயப்பனின் சுவீகாரத்தை ரத்து செய்வதாக அறிவித்த அவர், தான் இறந்த பிறகு ஐயப்பனோ அவரது பிள்ளைகளோ தனக்கு ஈமக் கிரியைகள் செய்யக்கூடாது எனவும் உயில் எழுதி வைத்தார். இதனிடையே செட்டிநாடு குழும நிறுவனங்களை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சுவீகார புதல்வர், அதன் தலைவர் பதவியிலிருந்து எம்.ஏ.எம்-மை நீக்கினார்.
இதனால் மனதளவில் மேலும் பாதிப்படைந்த எம்.ஏ.எம்., “இன்னும் ரெண்டு வருசமோ மூணு வருசமோ இருக்கப்போறேன். இருக்குற வரைக்கும் நிம் மதியா இருக்கலாம்னா விடமாட் டேங்குறாங்களே” என்று புலம்பிக் கொண்டிருந்தார். மருத்துவமனை யில் இறுதியாக சுவாசக் கருவி அகற்றப்படும் வரை அவருக்கு அந்த நிம்மதி கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago