பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் அச்சுவெல்லம் தயாரிக் கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருநாளில் சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு பொது மக்கள் அச்சுவெல்லத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அச்சுவெல்லம் தயாரிப்பில் தஞ்சை மாவட்டம் முக்கிய இடத்தை வகிக்கிறது.
தொடக்க காலத்தில் கரும்பு ஆலைகள் இல்லாதபோது, விவசாயிகள் கரும்பைப் பயிரிட்டு அதனை தங்களுடைய இல்லங்களிலேயே சாறாகப் பிழிந்து, பாகு காய்ச்சி சரியான பக்குவத்தில் அச்சில் ஊற்றி அச்சுவெல்லத்தை தயாரித்தனர்.
காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளின் வரவால், கரும்பு உற்பத்தி அதிகரித்தாலும், அச்சு வெல்லம் தயாரிப்பு முறை மட்டும் மாறவில்லை. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் அய்யம்பேட்டை பகுதியில் இலுப்பகோரை, மாகாலிபுரம், உள்ளிக்கடை, புதுத்தெரு, கிருஷ்ணாபுரம், கணபதி அக்ர ஹாரம், மணலூர், தேவன்குடி, வீரமாங்குடி, சோமேஸ்வரபுரம், செம்மங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங் களில் வீடுகளில் குடிசைச் தொழிலாக அச்சுவெல்லம் தயாரிக்கப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் அச்சு வெல்லம் பெரும்பாலும் திண்டுக் கல் மாவட்டம் பழநியை அடுத்த நெய்க்காரப்பட்டி வெல்லமண்டி யில் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டு முழுவதும் அச்சுவெல் லம் தயாரிப்பு இருந்தாலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகமாக தயாரிக்கப்படும். இங்கு தயாரிக்கப்படும் அச்சுவெல்லம் இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதுகுறித்து அச்சுவெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மாகாலி புரம் பிரகாஷ் கூறியபோது, “எங்க ளுக்குத் தேவையான கரும்பை நாங்களே பயிரிடுவோம். சில நேரம் மற்ற விவசாயிகளிடம் கரும்பு வாங்கிக் கொள்வோம். கரும்பைப் பிழிந்து சாறு எடுத்து, அதனை பெரிய இரும்புக் கொப்பரையில் காய்ச்சுவோம். சுமார் இரண்டரை மணி நேரம் காய்ச்சி பாகு எடுத்து, அதனை அச்சில் ஊற்றி கால் மணி நேரம் கழித்து எடுத்தால் அச்சுவெல்லம் ரெடி. இந்த வெல்லத்தில் வெளிர் நிறத்தில் உள்ளதைவிட அடர் மஞ்சள் நிறத்தில் உள்ளதுதான் உடலுக்கு நல்லது.
தற்போது டீ, காபி போன்ற பானங்களில் சர்க்கரையைச் சேர்த் துக் கொள்வதால், எங்களது வெல் லத்துக்கு வரவேற்பு குறைவாக உள்ளது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் சுக்கு காபி, டீ போன்ற அனைத்து பானங்களிலும் வெல்லத்தைத்தான் பயன்படுத் துகின்றனர். எனவே, அந்த மாநி லத்தில் தமிழக அச்சுவெல்லத்துக்கு நல்ல மவுசு உள்ளது. தற்போது 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.900 வரை விலை போகிறது. குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் இந்த தொழிலில் ஈடுபடுவதால் குடிசைத் தொழிலாக நாங்கள் செய்து வருகிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago