உங்கள் பகுதியில் உள்ள மளிகைக் கடைகள் விவரம்: சென்னை மாநகராட்சி இணையதளம், செயலியில் பார்க்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் சுமார் 2000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் குறித்த விவரங்களை இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலி மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

”கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் அவர்களின் பகுதிகளிலேயே கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களின் மூலம் மே 31 முதல் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க தொழில் உரிமம் பெற்ற 7,500 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களின் வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டு மற்றும் வில்லைகள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட வார்டு அலுவலகங்களில் வரி வசூலிப்பாளர் மூலம் இன்று (30.05.2021) முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை 2,197 விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களின் விவரம் http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/ என்ற இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் அங்காடியின் பெயர், தொலைபேசி எண், வார்டு மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பர் மார்க்கெட் என வகைப்படுத்தி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி விருப்பமுள்ள விற்பனையாளர்களிடம் தேவையான மளிகைப் பொருட்களைப் பெற்றுப் பயன்பெறலாம்.

விற்பனையின்போது வியாபாரிகளும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்