ஆனைகட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர மருத்துவரை நியமித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடியின மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் எண்.24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டி, பெரிய ஜம்புகண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதை நம்பியுள்ள 13 ஆயிரம் மக்களில், 11 ஆயிரம் பேர் மலைவாழ் மக்கள். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால், இங்குள்ள கர்ப்பிணிப் பெண்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, “5 படுக்கை வசதிகள் கொண்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும். வென்டிலேட்டர், ஆக்சிஜன் படுக்கை மற்றும் பிரசவம் பார்க்க புதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் அரசு நியமிக்க வேண்டும். 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.
மேலும், அனைத்து வசதிகளுடன் இங்கு இருந்த அவசர ஊர்தியைப் பொள்ளாச்சிக்கு மாற்றிவிட்டு, சிறிய அவசர ஊர்தியை தற்போது கொடுத்துள்ளனர். இதனால் நோயாளிகளுக்குத் தேவையான அவசர சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சிகிச்சைக்காக 36 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே, சுகாதாரத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
» கரோனாவிலும் உதவும் பாஜகவினர்; அரசின் நம்பிக்கையைச் சிதைக்கும் சிலர்: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
எல்லையில் கண்காணிப்பு தேவை
கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைப்பகுதியில் தமிழக எல்லை முடிந்து கேரள எல்லை ஆரம்பமாகிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து பெட்ரோல் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தமிழக எல்லைக்குள் பலர் வந்து செல்கின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்களைப் பரிசோதிக்கவும், கண்காணிக்கவும் அரசுத் தரப்பில் நடவடிக்கை இல்லை. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago