சமீபத்தில் பெய்த கனமழையால் பழுதாகியுள்ள அரசு பஸ்களை போர்க்கால அடிப்படையில் சீர மைக்க சிறப்பு முகாம் நடத்த வேண் டும். மேலும், பயணிகளின் பாது காப்பை உறுதிப்படுத்த ஆர்டிஓக் கள் முழு ஆய்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் இயக்கப்படும் 22 ஆயிரத்து 800 அரசு பஸ்களில் 2.5 கோடி பேர் தினமும் பயணம் செய்கின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையில் அரசு பஸ்கள்தான் அதிகளவில் இயக்கப்பட்டன. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், திரு நெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை சேதமடைந்துள்ளன.
இன்ஜின், டயர், கண்ணாடி, இருக்கைகள், படிகள், கதவு கள் உடைந்துள்ளன. எனவே, அவற்றை போர்க்கால அடிப் படையில் சீரமைக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். பயணிகளின் பாது காப்பை உறுதி செய்ய வட்டார போக்குவரத்து அதி காரிகள் தலைமையில் (ஆர்டிஓக் கள்) வாகன ஆய்வாளர்கள் முழு ஆய்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சீரமைக்க 4 மாதங்கள்
இது தொடர்பாக அரசு போக்கு வரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சமீபத்தில் பெய்த கன மழையால் சேதமான பஸ் களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அடுத்த 4 மாதங்களில் அவை முழுமையாக சீரமைக்கப்படும்’’ என்றனர்.
சிறப்பு முகாம்கள்
இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘கனமழையால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சீரமைக்க அரசு சிறப்பு முகாம்களை நடத்தியது. கனமழையால் அரசு பஸ்களில் 50 முதல் 60 சதவீதம் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் போக்குவரத்துக் கழகங் களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையாலும், உதிரி பாகங்கள் பற்றாக் குறையாலும் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன. பெரும்பாலான மக்களின் போக்குவரத்து ஆதார மாக உள்ள அரசு பஸ்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நிதி ஒதுக்கி, சிறப்பு முகாம்களை அமைக்க முன்வர வேண்டும்’’ என்றார்.
பயணிகள் பாதுகாப்பு
தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, ‘‘சமீபத்தில் முடிச்சூர் அருகே மாநகர பஸ் படிக்கட்டு உடைந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்த அரசு பஸ்கள் கனமழைக்கு பிறகு மிகவும் மோசமான நிலையில்தான் இயக்கப்படுகின்றன. இரு பெரிய நிறுவனங்களிடமிருந்துதான் பஸ்கள் வாங்கப்படுகின்றன. பழுதாகியுள்ள பஸ்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிறுவனங் களிடம் அரசோ, நிர்வாகமோ வலியுறுத் தியதாக தெரிய வில்லை. எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு பஸ்களை சீரமைத்து, முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’’ என்றார்.
முழு ஆய்வு நடத்தப்படுமா?
இது தொடர்பாக போக்கு வரத்து துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முழுமையான ஆய்வுக்கு பிறகு தகுதிச்சான்று பெற்றுத்தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த கனமழையிலும் அரசு பஸ்கள் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. பஸ்களை அதிக நாட்களுக்கு நிறுத்திவைத்திருந்தால் மட்டுமே பெரும் அளவில் பழுது ஏற்படும். கனமழையால் பழுதாகியுள்ள பஸ்களை சீரமைத்து வருகின்ற னர். எனவே, முழு ஆய்வு தேவையில்லை என கருதுகிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 secs ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago