தமிழகத்தில் நூலகங்களில் புரவ லர், பெரும் புரவலர், நன்கொடை யாளராகச் சேர யாரும் ஆர்வம் காட்டாததால் நூலகர்களே புரவலராகச் சேர்கின்றனர். நன்கொடை குறைந்ததால், நிதியில்லாமல் பெரும்பாலான நூலகங்களில் கழிப்பறை, குடிநீர் வசதியில்லை.
தமிழகத்தில் 32 மாவட்ட மைய நூலகங்கள், 4,200-க்கும் மேற்பட்ட கிளை, ஊர்ப்புற மற்றும் பகுதிநேர நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் 1990-ம் ஆண்டு புரவலர், பெரும் புரவலர் மற்றும் நன்கொடையாளர் திட்டம் தொடங்கப்பட்டது. ரூ.1,000 செலுத்தி புரவலராகவும், ரூ.5 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் செலுத்தி பெரும் புரவலராகவும், ரூ. 10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் செலுத்தி நன்கொடையாளராகவும், நூலகத்தில் சேரலாம். இந்த திட்டம் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியை, அந்தந்த நூலகங்கள் பெயரில் வங்கிகளில் செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டி நூலக வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடங்கியபோது பொதுமக்கள் ஆர்வமாக புரவல ராகச் சேர்ந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக புரவலர், பெரும் புரவலர் மற்றும் நன்கொடையாளராக சேர பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
அதனால், நூலகங்களுக்கு கூடுதல் நாளிதழ்கள், புத்தகங்கள் வாங்க நூலகர் களால் முடிய வில்லை. குடிநீர், வாடகை மற்றும் கட்டிட பராமரிப்பு என நூலகங் களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடிய வில்லை. புரவலர் திட்டம் முடங் காமல் தொடர்ந்து நீடிக்க நூலக உறுப்பினர்களே தற்போது ரூ.1,000 செலுத்தி புரவலராக சேர்கின்றனர்.
இதுகுறித்து நூலகர்கள் கூறியதாவது:
மாவட்ட மைய நூலகங்களை தவிர மற்ற நூலகங்கள் எதிலும் கழிப்பறைகள் இல்லை. கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் பகுதிநேர நூலகங்களில் 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள் தான் நூலகர்களாக பணிபுரிகின் றனர். இவர்கள், அவசரத்துக்கு கழிப்பறை செல்ல முடியாமல் பக்கத்து வீடுகளுக்குச் செல்ல வேண்டிய அவலம் உள்ளது. நூலகர்கள், வாசகர்கள் குடிப்பதற்கு நூலகத்தில் குடிநீர் இல்லை.
மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி மற்றும் கிராம பஞ்சாயத் துகளும் நூலகத்துக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்குவ தில்லை. பொது குடிநீர் குழாய் களில் இருந்து நூலகர்கள்தான் குடிநீர் எடுத்து வந்து வைக்கின்றனர். வாசகர் வட்டங்கள் மூலமே நூலகத்துக்கு தற்போது சிறுசிறு உதவிகள் கிடைத்து வருகிறது.
அரசு ஒதுக்கும் பொதுநிதி நூலகத்தின் மின் கட்டணம், நூலக பராமரிப்புக்கே சரியாகிவிடுகிறது. தற்போது யாரும் புரவலராக விரும்பி சேர்வதில்லை. நூலகர்கள் முயற்சியால் ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் சேர்கின்றனர். தற்போதைய விலைவாசி உயர்வு, நூலகர்கள் வருகைக்கு ஏற்ப புரவலர் திட்ட வங்கி பணத்தில் கிடைக்கும் வட்டித் தொகை போதுமானதாக இல்லை.
மதுரை மைய நூலகத்தில் 1990-ம் ஆண்டு முதல் இதுவரை 155 பேர் மட்டுமே புரவலராகச் சேர்ந்துள்ளனர். அதில் ஒரே ஒரு வர் மட்டுமே பெரும் புரவலர். இது வரை நன்கொடையாளர் ஒருவர் கூட சேரவில்லை. தற்போது நூலகத்தில் பணிபுரியும் 12 ஊழியர் களே ரூ.1, 000 செலுத்தி புரவல ராகச் சேர்ந்துள்ளனர்.
கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் பெரும்பாலும் வாடகைக் கட்டிடங்களில்தான் செயல்படுகிறது. அதற்கான வாடகை செலுத்தக் கூட நிதியில்லாமல் போய்விடுகிறது.
கடந்த காலத்தில் பெரிய நிறுவனங்கள்கூட அவர்களாகவே முன்வந்து நூலகத் துக்கான பொருட் களை வாங்கித் தருவர். தற்போது அவர்களும் நூலகத்துக்கு உதவ முன் வராததால் தமிழகத்தில் பல நூலகங்கள் வாடகையில்லா கட்டிடங்களில் புத்தகங்கள் வைக்க இடமில்லாமல் இடநெருக்கடியில் செயல்படுகின்றன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நூலகத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நூலக நிதி முன்பை காட்டிலும் அதிகளவு ஒதுக்கப்படுகிறது. நூலகங்கள் படிப்படியாக நவீனமயமாக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago