கோவையில் 47 இடங்களில் நாளை கோவாக்சின் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, இன்று (மே 27) சுகாதாரத்துறை கூறியதாவது:
"கோவை மாவட்டத்தில் பெரியபோது, பொகலூர், காரமடை, நல்லட்டிபாளையம், அரிசிபாளையம், தாளியூர், நெகமம், கஞ்சம்பட்டி, சர்க்கார் சாமகுளம், வி.சந்திராபுரம், சோமனூர், பூலுவப்பட்டி, சிடிஎம் ஹோம், ராம்நகர், கணபதி மாநகர், கணபதி, கவுண்டம்பாளையம், ஜெயில் ரோடு, கே.கே.புதூர், கல்வீரம்பாளையம், காமாட்சிநகர், குனியமுத்தூர், குறிச்சி, சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், நீலிகோணாம்பாளையம், பட்டுநூல், சுக்ரவார்பேட்டை, பீளமேடு, போத்தனூர், ஆர்.கே.பாய், சுக்ரவார்பேட்டை, ராஜா தெரு, ராமநாதபுரம், ரத்தினபுரி, சீரநாயக்கன்பாளையம், செல்வபுரம், சவுரிபாளையம், தெலுங்குபாளையம், தொண்டாமுத்தூர், துடியலூர், உப்பிலிபாளையம், வி.வி.எம்.ஹோம், டவுன்ஹால், வடவள்ளி, வடுகபாளையம், வால்பாறை, வெள்ளகிணறு, விளாங்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மேட்டுப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் தலா 200 கோவாக்சின் தடுப்பூசிகள் என, மொத்தம் 9,400 தடுப்பூசிகள் போடப்படும்.
இந்த முகாமில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 28 நாட்களுக்கு முன் முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். காலை 9 மணி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். வரும்போது கண்டிப்பாக ஆதார் அட்டை எடுத்துவர வேண்டும்".
» மேகதாது அணையை கட்ட எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
» சிறைகளில் குழந்தைகளுடன் உள்ள 7 பெண் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
இவ்வாறு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago