புதுச்சேரியில் ஒவ்வொரு கிராமமாக தேர்ந்தெடுத்து தடுப்பூசி போட்டு கரோனா இல்லாத கிராமமாக்க புது முயற்சியை நாளை முதல் எடுக்க உள்ளோம் என்று துணைநிலை தமிழிசை தெரிவித்தார். வீட்டில் தனிமைப்படுத்தி பல்ஸ் ஆக்சி மீட்டர் வாங்க இயலாதவர்களுக்காக பல்ஸ் ஆக்சி மீட்டர் பேங்க் காரைக்காலில் துவங்கியுள்ளோம் விரைவில் புதுச்சேரியிலும் துவங்குவோம் என்று தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியில் பல்வேறு அமைப்பினர் கரோனா நிவாரணப்பொருட்கள் நிவாரண நிதியை இன்று வழங்கினர். இந்நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது,
கரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக இயங்கி வருகிறோம். கரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் ஓரளவு குறைந்துள்ளன. ஒரு உயிர்க்கூட இழக்கக்கூடாது என தீவிரமாக பணியாற்றுகிறோம்.
புதுச்சேரியில் 2000 ஆக்சிஜன் படுக்கைகள் வரை உயர்ந்துள்ளன. இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400 ஆக்சிஜன் படுக்கைகள் வரை உள்ளன. இது ஜிப்மரை விட அதிகம். அரசு மருத்துவமனைகளுக்கு நம்பிக்கையோடு வர கட்டமைப்பு மேம்படுத்தியுள்ளோம். உயிர்காற்றுத்திட்டத்துக்கு பலரும் உதவி வருகின்றனர்.
நாளை முதல் ஒவ்வொரு கிராமமாக தேர்ந்தெடுத்து அனைவருக்கும் தடுப்பூசி போட்டு, கரோனா இல்லாத கிராமமாக்க புது முயற்சி எடுக்கிறோம்.
பிராணவாயு செவிலியர்கள். (ஆக்சிஜன் சிஸ்டர்ஸ்), திட்டத்தை துவக்கியுள்ளோம். கரோனாவால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மணி நேரம் ஒருமுறை இவர்கள் கண்காணிப்பார்கள். இது மருத்துவர்களும் தொற்றாளர்களுக்கும் உதவும்.
அதேபோல் மனநல மேம்பாட்டுக்காக தொலைபேசி இணைப்பை அறிமுகம் செய்துள்ளோம்.பல்ஸ் ஆக்சி மீட்டர் பேங்க் என்ற திட்டத்தை காரைக்காலில் துவக்கியுள்ளோம். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆக்சிஜன் அளவை காண பல்ஸ் ஆக்சி மீட்டர் வாங்க இயலாதோர் இங்கு ஆக்சி மீட்டரை வாங்கி பயன்படுத்தி, குணமான பிறகு திருப்பி தரலாம். விரைவில் புதுச்சேரியிலும் துவக்குவோம் என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago