தமிழக அரசின் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர் ஒருவர் அளித்த கோரிக்கை மனுவின் மீது நடவடிக்கை எடுத்த புதுக்கோட்டை ஆட்சியர், அந்த மாணவரின் வீடு தேடிச் சென்று கல்வி உதவித் தொகையை வழங்கினார். மேலும், கல்விக் கடன் பெற ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார். இதனால், அந்த மாணவரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை களை தீர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உங் கள் தொகுதியில் முதல்வர்’ எனும் திட்டத்தை செயல்படுத்த ஒரு துறையை உருவாக்கி, அதற்கான அலுவலர்களையும் நியமித்துள்ளார். இத்துறையினர், கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் லெட்சுமணப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் குறளரசன்(18) என்பவர் கல்வி உதவித் தொகை கோரி அளித்த மனுவை விசாரித்து, அவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நேற்று மாணவரின் வீட்டுக்கே சென்று வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறும்போது, ‘‘உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வழங்கிய மனுக்களின் மீது தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.
இதுகுறித்து மாணவர் குறளரசனின் தந்தை அண்ணாதுரை, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: எனது மகன் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கேட்டரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். படிப்பு தொடர்பாக கோவையில் பயிற்சிக்கு சென்றிருந்தபோது, அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினிடம், 3 ஆண்டுகளுக்குமான கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு உதவி கோரி குறளரசன் மனு அளித்திருந்தார். அந்த மனு மீது விசாரிக்கப்பட்டு, தற்போது உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கல்வி உதவித் தொகையாக (ஆண்டுக்கு) ரூ.1,250 வழங்கப்பட்டது. மேலும், கல்விக் கட்ட ணத்தை செலுத்துவதற்கு வங்கிக் கிளை மூலம் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். கோரிக்கை மனுவுக்கு உடனடியாக தீர்வு கண்டு, வீடு தேடி வந்து உத்தரவு வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago