சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் இதுவரை 15,031 நபர்கள் பயன்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் மூலம் இதுவரை 15,031 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 26) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மாநகராட்சியின் முதற்கட்ட உடல் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்லவும், அங்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அல்லது பாதுகாப்பு மையங்களில் அனுமதிக்க அல்லது மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்கு மாநகராட்சியின் சார்பில் 250 எண்ணிக்கையிலான சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை இதுவரை 15,031 நபர்கள் பயன்படுத்திப் பயன் அடைந்துள்ளனர். வாகன வசதி இல்லாத நபர்கள் முதல்கட்ட உடல் பரிசோதனை மையங்களுக்குச் (screening centre) செல்ல மாநகராட்சியில் கார் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மாநகராட்சியின் gccvidmed செயலி மற்றும் 94983 46510, 94983 46511, 94983 46512, 94983 46513, 94983 46514 வாட்ஸ் அப் எண்கள் மூலம் காணொலி வாயிலாக (video call) மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்