தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் இன்று (மே 26) வெளியிட்ட அறிவிப்பு:

"வெப்பச் சலனம் காரணமாக,

26.05.2021: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

27.05.2021: தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்ற புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

28.05.2021, 29.05.2021: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

30.05.2021: தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று ஒருசில நேரங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டி மீட்டரில்):

மைலாடி (கன்னியாகுமரி) 24, இரணியல் (கன்னியாகுமரி) 19, கொட்டாரம் (கன்னியாகுமரி) 17, சேத்தியாத்தோப்பு (கடலூர்), சுராலகோடு (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) தலா 15, கன்னியாகுமரி 13, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 12, பிளாண்துறை (கடலூர்), லால்பேட்டை (கடலூர்) தலா 11, சின்னக்கல்லாறு (கோவை( 10, பெரியாறு (தேனி) 9, பாபநாசம் (திருநெல்வேலி) 8, சேலம் 7, பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), செஞ்சி (விழுப்புரம்), அகரம் சீகூர் (பெரம்பலூர்) தலா 6.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

26.05.2021, 27.05.2021: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

26.05.2021: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

26.05.2021: கேரள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

26.05.2021: வட மேற்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 130 முதல் 140 கி.மீ வேகத்திலும் இடையிடையே 155 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

26.05.2021 முதல் 30.05.2021 வரை: தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

12.20 மணிக்குக் கிடைத்த இந்திய செயற்கைக்கோள் படத்தின்படி அதிதீவிர யாஸ் புயல் பாலசுருக்கு அருகே கரையைக் கடந்தது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்