கரோனா நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்களுக்குத் திருப்பத்தூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் காலை, மதிய நேரங்களில் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உடன் தங்கி நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை சார்பில் சத்து மிகுந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், உடன் தங்கியுள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. மாறாக வெளியே சென்று உணவு வாங்கவும் அவர்கள் அச்சப்படுவதால் பலர் உணவின்றிச் சிரமப்பட்டும், சில நேரங்களில் பட்டினியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து வந்த தகவலின் பேரில், திருப்பத்தூர் வட்டம், ஏரிக்கோடி பகுதியில் உயர் கல்வி முடித்த இளைஞர்கள் 50 பேர் ஒன்றுசேர்ந்து தொடங்கிய ‘பசுமை தாய்நாடு அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் கரோனா நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுக்கு தினசரி 2 வேளை இலவச உணவு வழங்க முன்வந்தனர்.
» எல்லையில் விநோதம்: ஒரே சாலையில் புதுச்சேரி பகுதியில் கடைகள் திறப்பு, தமிழகப் பகுதியில் கடையடைப்பு
» மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது; சிறையில் அடைப்பு
அதன்படி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் 350 நோயாளிகளின் உறவினர்களுக்குக் காலை, மதிய நேரங்களில் இலவச உணவை ’பசுமை தாய்நாடு அறக்கட்டளை’ தொண்டு நிறுவனத்தினர் செய்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி கரோனா முழு ஊரடங்கால் சாலையோரங்களில் ஆதரவற்று இருக்கும் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்குப் பசுமை தாய்நாடு அறக்கட்டளையினர் மதிய உணவை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
கரோனா பெருந்தொற்றால் அவதிப்படும் ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தொண்டு நிறுவனத்தினர் தொடர்ந்து செய்து வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர், படித்த இளைஞர்களின் மனிதாபிமான செயலைக் கண்டு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago