கரோனா பாதிப்பில் சென்னையை நெருங்கும் கோவை: இன்று ஒரே நாளில் 4,277 பேருக்கு தொற்று 

By க.சக்திவேல்

கரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சென்னையின் அளவை கோவை இன்று (மே 24) நெருங்கியுள்ளது.

கோவையில் கரோனா முதல் அலையில் அதிகரித்த பாதிப்பு பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த மார்ச் மாதத்தில் நூறுக்கு கீழ் இருந்து வந்தது. கடந்த மார்ச் 17-ம் தேதி ஒரேநாளில் 107 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து இரண்டு மாதங்களாக தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்புவரை சராசரி பாதிப்பு 3 ஆயிரம் என்று இருந்த நிலையில், நேற்று மட்டும் முன் எப்போதும் இல்லாத வகையில் 3,944 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று ஒருநாளில் பாதிப்பு 4,277-ஆக அதிகரித்துள்ளது. 2,528 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 33,325 பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையைவிட தினசரி பாதிப்பு அதிகம் உள்ளதால் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் புதிதாக பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு படுக்கைகள் கிடைக்காத சூழல் உள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 5,870 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 81 பேர் உயிரிழந்துள்ளனர். 48,151 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகமானோருக்கு தினந்தோறும் தொற்று உறுதியாகி வந்நிலையில், கிட்டதட்ட சென்னையின் அளவுக்கே இன்று தொற்று உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்