தளர்வுகளற்ற  ஊரடங்கு அறிவிப்பு: மதுரையில் பகல் முகூர்த்தம் தவிர்த்து அதிகாலை நேரத்திற்கு மாறிய திருமணங்கள்

By என்.சன்னாசி

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வேறு வழியின்றி முழு ஊரடங்கை அமல்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, பிற அனைத்து போக்குவரத்துக்கும், கடைகளைத் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற விழாக்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனிடையே வைகாசி மாத சுபமுகூர்த்த நாட்களில் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு அந்த நாட்களைத் தேர்வு செய்தனர்.

இந்நிலையில் மே 23, 24 ஆகிய முகூர்த்த நாட்களில் திருமணத்திற்கு திட்டமிட்டவர்கள், பெரும்பாலும் 24ம் தேதி திங்கள் கிழமையை தேர்ந்தெடுத்தனர்.

இருப்பினும், திடீரென அரசு 24ம்தேதி முதல் அடுத்த ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் மே, 22,23 ஆகிய இரு நாட்களிலும் தளர்வு அளிக்கப்பட்டதால் பல இடங்களில் 24ம் தேதிக்கு ஏற்பாடு திருமணத்தை 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி நடத்தினர்.

ஏற்கெனவே, திட்டமிட்டு 24ம்தேதி தேதியை தேர்வு செய்த சிலர், குறிப்பிட்ட தேதியை மாற்ற வேண்டாம் என நினைத்து அதே நாளில் அதிகாலையில் உள்ளூரிலுள்ள கிராம கோயில்களில் திருமணங்களை நடத்தினர்.

அழைப்பிதழ் கொடுத்தவர்களுக்கு முன்கூட்டியே தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து, முதல்நாள் இரவே மணமகள், மணமகன் ஊர்களுக்கு வரவழைத்தனர்.

மேலும், திருமண இ.பதிவுக்கான சிக்கல், வெளியூர்களில் இருந்து வருவதற்கு வாகனப் போக்குவரத்து இல்லாத சூழலில் பெரியளவில் உற்றார், உறவினர் இன்றி மிக எளிமையாகவே சில திருமணங்கள் இன்று நடந்தேறின.

இது குறித்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பெத்தானேந்தலைச் சேர்ந்த ஊர்காவலன் என்பவர் கூறுகையில்,‘‘ எனது தம்பி ஈஸ்வரன் மகள் சுகன்யாவுக்கு விருதுநகரிலுள்ள ஒரு கிராமத்தில் திருமண ஏற்பாடு செய்தோம். மே 24ம்தேதி காலை 9.30 முதல் 10மணிக்கு நடப்பதாக இருந்தது.

திடீரென முழு ஊரடங்கு அறிவிப்பால் முன்கூட்டியே 23ம்தேதி மாற்றம் என, யோசித்தபோது, தேதி மாற்றுவதல் சில யோசனை வந்தது. வேறு வழியின்ற அதே தேதில் அதிகாலை நேரத்தில் கே. ஆலங்குளத்திலுள்ள கோயிலில் வைத்து, குறைந்த நபர்களுடன் திருமணத்தை நடத்தி முடித்தோம். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், சானிடைசர் போன்ற விதிமுறைகளை பின்பற்றப்பட்டது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்