திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே வந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

By ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் இன்று ஊரடங்கை மீறி தகுந்த காரணமின்றி வாகனங்களில் வெளியே வந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று (மே 24) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, இன்று திருச்சி மாநகர் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் ஒருவழிச் சாலையை ஏற்படுத்தியிருந்தனர். தகுந்த காரணங்கள் இன்றி வாகனங்கள் வெளியே வந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

தளர்வுகள் அற்ற ஊரடங்கு காரணமாக காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்ததால், அனைத்து கடைவீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. தேவையின்றி வெளியே வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்ததால், இன்று பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி இருந்தன. ஆள் நடமாட்டமும் இல்லை. ஆனால், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சாலையில் மட்டும் வாகனப் போக்குவரத்து வழக்கத்தைவிட சற்று குறைவாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்