கண்டமங்கலத்தில் முன் அறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடியதால் வாகனஓட்டிகள் அவதிப்பட்டனர்.
விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை கண்டமங்கலத்தில் ரயில்வே கேட் உள்ளது. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமே சென்று வந்தனர். இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி மக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வசதியாக 2 நாட்கள் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.பொதுமக்கள் தங்கள் தேவைகளை பெறவும், சொந்த ஊர்களுக்கு செல்லவும் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கண்டமங்கலம் ரயில்வே கேட்டை தண்டவாள பராமரிப்புப் பணிக்காக மூடினர்.
ஏற்கெனவே முன்அறிவிப்பின்றி மூடப்பட்டதால் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பராமரிப்பு பணி முடிய காலதாமதமானதால், மாற்று வழியில் மருதூர், மண்டகப்பட்டு வழியாகவாகனங்கள் சென்றன. புதுவையி லிருந்து, விழுப்புரத்திலிருந்து வந்த வாகனங்களும் மாற்று பாதையில் சென்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago