அதிமுகவில் இருந்து நீக்கியதால் நான் கவலைப்படவில்லை: முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் பதில்

By வ.செந்தில்குமார்

அதிமுகவில் இருந்து என்னை நீக்கியதால் கவலைப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் இன்று (மே-23) இரவு 8 மணியளவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது,

‘‘சென்னையில் எனது சகோதரியும், தாயாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிசகிச்சை பெற்றுவந்தனர்.

15 நாட்களுக்கு முன்பு எனது தாய் இறந்துவிட்டார். சகோதரிக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 19-ஆம் தேதி வாணியம்பாடியில் எனது மகன் நடத்தி வரும் மருத்துவமனையில் இருந்து வென்டிலேட்டர் எடுத்துச் செல்ல வந்திருந்தேன்.

அப்போது, திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் என்னை தொடர்பு கொண்டு எனது தாயார் இறப்புக்கு துக்கம் விசாரித்தார். நான் வாணியம்பாடியில்தான் இருக்கிறேன் என்று கூறியதுடன் உங்களுக்கு நேரில் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன் என கூறினேன்.

சென்னை செல்லும் வழியில், பயணியர் விடுதியில் தங்கியிருந்த அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

அவரும் எனது தாயார் இறப்புக்கு துக்கம் விசாரித்தார். இதில், என்ன தவறு இருக்கிறது. வீரமணிக்கு எந்த மனிதாபிமானமும் இல்லை.

எனது தாய் இறந்துவிட்டார் என்றும் கூட நினைக்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார். என்னை கட்சியில் இருந்து நீக்கியதால் கவலைப்படவில்லை. சந்தோஷப்படுகிறேன். எனது அரசியல் பணிக்கு அவர் முட்டுக்கட்டையாக இருந்தார்.

2016 தேர்தல் நேரத்தில் எனது வெற்றிக்கு பிரகாசம் பக்கபலமாக இருந்தார். அதனால் அவரை அரசியல் உதவியாளராக வைத்துக் கொண்டேன். அவர் பணம் வாங்கியது எல்லாம் எனக்குச் தெரியாது.

நான் என்ன கட்சியில் 50 ஆயிரம் ஒரு லட்சம் வாங்கும் நிலையிலா இருக்கிறேன். இவ்வளவு பேரிடம் பணம் வாங்கியது அவர் சொல்லித்தான் தெரியும்.

ஏப்ரல் மாதம் ஜெயசுதா என்பவர் புகார் அளிக்க வந்ததுமே எஸ்.பி அலுவலகத்தில் பிரகாசம் மீது புகார் கொடுத்துவிட்டேன். பணம் வாங்கியதற்கு அவர்தான் பொறுப்பு.வேண்டும் என்றால் எனது வங்கிக் கணக்கை தணிக்கை செய்துகெள்ளலாம்.

நான் திமுகவில் சேருகிறேனா இல்லையா? என்பதை உங்களுக்கு தெரியும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்