கரோனா சிகிச்சைக்கு திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டணம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, தற்போதுள்ள கரோனா தொற்று பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராகவும் இது கட்டுப்படுத்தக் கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பொது சுகாதார திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கோவிட்-19 தொற்று பரவல் தன்மையின் நிலையைக் கருத்தில் கொண்டு தொற்று நோய்க்கான சிகிச்சைக்கு தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டியலினை அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எளிதில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திருத்தப்பட்ட வழிமுறைகள் அரசாணை எண்.231 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை நாள். 07.05.2021 மூலம் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரையும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பொது மக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க மாண்புமிகு முதலல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதன்படி முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும். இதற்கென 2021-22 நிதி ஆண்டில் 1030.77 கோடி ரூபாய் நிதி தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பேரிடர் காலத்தில் பொதுமக்களின் கோவிட்-19 சிகிச்சைக்கான செலவுகளை பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நிர்ணயம் செய்த தொகையை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து 14.05.2021 அன்று நடைபெற்ற உயர் மட்டக்குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தி குழுவின் பரிந்துரையின் பேரில் அரசு ஆணை எண்.1887 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை நாள்.17.05.2021-ன்கீழ் குறிப்பிட்டவாறு ஆணைகள் வழங்கியுள்ளது.
முதல்வரின் அறிவிப்பின்படி அதி-தீவிர, தீவிர, மற்றும் தீவிரமில்லாத தொற்றுள்ள அனைத்து கோவிட்-19 நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
தனியார் மருத்துவமனையில் தீவிரமில்லாத கோவிட்-19 சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் நேரடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்படலாம்.
கரோனா தொற்று மிக அதிகமாக பரவிவரும் இந்தசூழலில் மக்கள் எவ்வித தொய்வுமின்றி உரியநேரத்தில் சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்களின் இன்னுயிர் காக்கப்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உயர்த்தி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தீவிரமில்லாத சிகிச்சைக்கு
வ.எண் சிகிச்சைமுறை பழையகட்டணம் திருத்தி அமைக்கப்பட்ட புதியகட்டணம்
1 தீவிரமல்லாதகோவிட் - 19 சிகிச்சைஆக்ஸிஜன்உதவிஇல்லாமல் Non Critical care - without Oxygen Support ரூ.5000 ரூ.5000
2 தீவிரமல்லாதகோவிட் - 19 சிகிச்சைஆக்ஸிஜன்உதவியுடன் Non Critical care - Oxygen Support - ரூ.15000
3 தீவிரசிகிச்சை - வெண்டிலேட்டர்வசதியுடன் ICU with Invasive Ventilation ரூ.15000 வரை ரூ.35000
4 தீவிரசிகிச்சை - ஊடுருவாவெண்டிலேட்டர்வசதியுடன் ரூ.11000 வரை ரூ.30000 ICU With Non-Invasive Ventilation - Bi-PAP / CPAP
5 தீவிரசிகிச்சைஆக்ஸிஜன்உதவியுடன் - வென்டிலேட்டரிலிருந்துபடிப்படியாககுறைப்பதற்கு ICU With O2 - Only as Stepping down - ரூ.25000
* அதி-தீவிர சிகிச்சைக்கு முந்தைய ரூ.15000/-லிருந்து நாளொன்றிற்கு ரூ.35000/- ஆக அதிகரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆய்வக பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்கப்படும்
* இதன் மூலம் பொதுமக்களின் சிகிச்சை கட்டணம் முழுதும் தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனைகளிலும் உடன் சிகிச்சை கிடைத்திட வழிவகை செய்யும்.
* மேலும் தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் இதர பொது மக்களுக்கும் சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைமுறை கட்டணம்
தீவிரமல்லாத கோவிட் - 19 சிகிச்சை ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் Non Critical care - without Oxygen Support ரூ.7500 மருத்துவமனைதரவரிசை A1 & A2 ரூ.5000 மருத்துவமனைதரவரிசை A3 to A6
தீவிரமல்லாத கோவிட் - 19 சிகிச்சை ஆக்ஸிஜன் உதவியுடன் Non Critical care - Oxygen Support ரூ.15000
தீவிரசிகிச்சை - வெண்டிலேட்டர் வசதியுடன் ICU with Invasive Ventilation ரூ.35000
தீவிரசிகிச்சை - ஊடுருவா வெண்டிலேட்டர் வசதியுடன் ICU With Non-Invasive Ventilation - Bi-PAP / CPAP ரூ.30000
தீவிரசிகிச்சை ஆக்ஸிஜன் உதவியுடன் - வென்டிலேட்டரிலிருந்து படிப்படியாக குறைப்பதற்கு ICU With O2 - Only as Stepping down ரூ.25000
தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெறுவது குறித்து பொதுமக்கள் 1800 425 3993 / 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 X 7 புகார்களை அளிக்கலாம்.
'புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago