வலைதளங்களில் பழனிசாமி குறித்து அவதூறு: அதிமுக வழக்கறிஞர் அணியினர் காவல் ஆணையரிடம் புகார்

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் அணியினர் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் அணியினர் நேற்று ஒரு புகார் மனு கொடுத்
தனர். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குறித்து ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு தனியார் தொலைக்காட்சியில் வந்த தகவல் என கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

அதில், ‘முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை என்ற தலைப்பில், நாங்கள் தாயில்லாத பிள்ளைகள். எங்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அப்படி எங்கேயும் கூறவில்லை. ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி ஒரு அவதூறு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவதூறு கருத்துகளை பரப்பி வரும் நபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்