சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் பேக் தட்டுப்பாட்டால் உடலை பேக்கிங் செய்வதில் சிக்கல்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக் பேக் இல்லாததால் பழைய போர்வை மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கவச உடை மூலம் பேக்கிங் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதற்கான அறிகுறியுடன் உள்ளோர் என 650-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் கரோனா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் 25-க்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர்.

கரோனா தொற்று மற்றும் கரோனா அறிகுறியுடன் இறந்தவர்களின் உடல்களை மருத்துவ முறைப்படி பேக்கிங் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, முதலில் இறந்தவரின் உடல் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பேக் மூலம் பேக்கிங் செய்யப்படும். அதன் பிறகே அமரர் ஊர்தி மூலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் கடந்த சில மாதங் களாக பிளாஸ்டிக் பேக் இருப்பு இல்லாததால் இறந்தவரின் உறவி னர்களிடம் பழைய போர்வையை பெற்று, அதன் மூலம் பேக்கிங் செய்கின்றனர். பிறகு மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் கவச உடையால் (பிளாஸ்டிக் ஷீட்டால் தயாரிக்கப்பட்ட பிபி கிட்) உடலை மூடிக் கொடுக்கின்றனர்.

இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ‘பிளாஸ்டிக் பேக் வராததால் இறந்தவர்களின் உடல்களை கவச உடையால் பேக் செய்கிறோம். இப்பிரச்சினை தமிழகம் முழுவதும் உள்ளது’ என்று கூறினர்.

இறந்தவரின் உறவினர்களிடம் பழைய போர்வையை பெற்று, அதன் மூலம் பேக்கிங் செய்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்