கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பாக மின் மயானங்களுக்கு எடுத்துச் சென்று அவர்களது மத சடங்குகளின்படி இறுதி மரியாதை செய்யும் சேவையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊரடங்கின்போது ஏழைகளுக்கு உதவுதல், கரோனா தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்கின்றனர்.
இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், ஒருங்கிணைப் பாளருமான பீர் முகம்மது கூறியது:
கரோனா இரண்டாவது அலையில் சென்னை, திருச்சி, தென்மாவட்டங்கள் முழுவதும் கரோனாவால் இறந்த 387 உடல்களை அடக்கம் செய்துள்ளோம். மதுரையில் மட்டும் சுமார் 48 உடல்களை அடக்கம் செய்துள்ளோம். இது தவிர, தொற்று பாதித்த 21 பேருக்கு ஆக்சிஜன் ஏற்பாடு, 32 பேருக்கு படுக்கை வசதி, 35 பேருக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துள்ளோம்.
சென்னை, கோவையில் சொந்த செல வில் கரோனா கேர் மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
முதல் அலையில் தமிழகத்தில் மட்டும் 240-க்கும் மேற்பட்ட உடல்களை அடக் கம் செய்துள்ளோம். கரோனா முதல் அலையில் நாடு முழுவதும் 1,517 உடல் களை அடக்கம் செய்திருக்கிறோம். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறி முறையின்படி, 10 அடி ஆழ குழி, உடலை சுற்றிலும் உப்பு போடுதல் போன்ற விதிகளைப் பின்பற்றி அடக்கம் செய்கிறோம். அவரவர் சமூகச் சடங்கு முறைகளுடன் விரும்பிய இடங்களில் அடக்கம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago