இம்மாதம் இறுதிக்குள் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறையினர் இலக்கு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இம்மாதம் இறுதிக்குள் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 630 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,957- ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் 4,140 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங் களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், முழுமையாக குண மடைந்த 431 பேர் நேற்று வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி நேற்று 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழப்பு எண் ணிக்கை 256 -ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்டம் முழுவதும் 630 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளில் 480 தெருக்களில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வெளியே வர முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கரோனா பரவல் அதிகமாக காணப்படும் பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றா தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தியுள்ளார். மேலும், முழு ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகா தாரத்துறையினருக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பரவலை குறைக்க தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை முதல் தவணை தடுப்பூசி 59 ஆயிரம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 19 ஆயிரத்து 500 பேருக்கும் போடப்பட்டுள்ளதாகவும், கரோனாபரவல் அதிகமாக கண்டறியப் படும் பகுதிகளில் கரோனா தடுப் பூசி போடும் முகாமை நடத்தி தகுதி யுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இம்மாதம் இறுதிக்குள் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்