பால்வளத் துறையின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை சிவகாசி தொகுதியைவிட்டு ராஜபாளையம் தொகுதியில் மாறி நிற்கச் சொன்னது வாஸ்து சாஸ்திரம் பார்த்துச் சொன்ன திருவண்ணாமலை ஜோசியர்கள் நான்கு பேராம். ஸ்தலத்துக்கே வந்து ஜாதகம் கணித்த அந்த ‘கில்லாடிகள்’, “மாவட்டத்தின் மேற்கு மூலையில் இருக்கும் ராஜபாளையத்தில் நின்றால் ராஜயோகம் தான். மீண்டும் நீங்கள் அமைச்சராவீர்கள்” என்றெல்லாம் அளந்தார்களாம். இதையெல்லாம் நம்பி கையில் வஞ்சகமின்றி கையிறுகளைக் கட்டிக்கொண்டு தொகுதி மாறிய பாலாஜி, இப்போது ஏகத்துக்கும் அப்செட்டாம். “நீங்க சிவகாசியிலேயே நின்னுருந்தா ஜெயிச்சிருக்கலாம்ணே” என்று கட்சிக்கு அப்பாற்பட்ட அவரது நண்பர்கள் சொன்னதற்கு, “என்ன செய்ய... கண்ணை மறைச்சிருச்சு. விதி வலியதுங்க” என்று சொன்னாராம் பாலாஜி. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கத் தயாரானால் முதல் வரிசையில் தனது பெயரும் இருக்கும் என கணக்குப் போடும் பாலாஜி, பாஜகவில் ஐக்கியமாகி பாதுகாப்புத் தேடிக்கொள்ளவும் தயங்க மாட்டார் என்கிறார்கள் விருதுநகர் மாவட்டத்துக்காரர்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago