"கரோனாவால் இறந்தவர் உண்டு, தடுப்பூசி போட்டவர் இறக்கவில்லை" என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்தார்.
புதுவையில் ஜனவரி 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதனிடையே 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து இன்று முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இணையதளத்தில் (cowin.gov.in) பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த மையத்தில் எந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற தகவல் அனுப்பப்பட்டது. அந்த மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். புதுச்சேரியில் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, கோரிமேடு பல் மருத்துவக்கல்லூரி, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காரைக்காலில் காமராஜர் கல்லூரி வளாகம், மாகே, ஏனாமில் அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தடுப்பூசி போட வந்திருந்த இளைஞர்களை பாராட்ட பூங்கொத்தை ஆளுநர் தமிழிசை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”18 வயதை கடந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட தொடங்கியுள்ளோம். இளைஞர்களிடம் அபரிதமான ஆதரவு உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மொத்தமாக ஆயிரத்து 600 பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர். இளைஞர்கள் பெரியவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர்.
தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள், உறவினர்களுக்கு ஊக்கம் அளித்து தடுப்பூசி போட இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 45 வயதை கடந்தவர்களிடம் ஊசி போட தயக்கம் உள்ளது. இந்த தயக்கத்தை இளைஞர்கள்கள் போக்க வேண்டும். ஊசி போட வந்ததுபோல, சமூக அக்கறையோடு முக கவசம் அணிய வேண்டும். வீட்டை வீட்டு வெளியே சுற்றுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டால் 3வது, 4வது என எந்த அலை வந்தாலும் கவலைப்பட வேண்டாம். தடுப்பூசி போட்டவர் இறக்கவில்லை - கரோனாவால் இறந்தவர் உண்டு. மக்கள் பிரதிநிதிகளும் தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தடுப்பூசி திருவிழா மையங்களில் இளைஞர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்க முடியாது. இவர்கள் முன்பதிவு செய்து ஒதுக்கப்பட்ட நேரத்தில் வருகின்றனர். இவர்களை அங்கு போகும்படி கூறினால் குழப்பம் ஏற்படும்" என்று குறிப்பிட்டார்.
தடுப்பூசி தர கோரிக்கை:
மத்திய அரசிடம் புதுவைக்கு 6 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என அரசு கோரியிருந்தது. முதல்கட்டமாக தற்போது 30 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தேவைகளுக்கு ஏற்ப தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago