வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் போன்ற அவசர தேவைக்கான மருத்துவ உபகரணங்களை வைத்திருக்க அறிவுறுத் துவதாக மாநகராட்சி சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரம் பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர் களை கண்காணிக்க, அவர்களுடன்அலைபேசியில் வீடியோ அழைப்புமூலமாக மாநகராட்சி சுகாதார துறையினர் கலந்துரையாடுகின்ற னர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன.
அந்தந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்காகமருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். மண்டலம் வாரியாக வீடுகளில்தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் களின் பட்டியல், அழைத்து பேசுவதற்கான எண்கள் உள்ளிட்ட விவரங்கள் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதேபோல, மருத்துவர்களின் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக் கப்பட்டுவிடும்.
தனிமைப்படுத்திக் கொண்டவர்களை ‘வீடியோ கால்’ மூலமாக அழைத்து பேசுவது, மருத்துவ ஆலோசனைகளை வழங்குவது நடைபெற்று வருகிறது. மேலும் அவர்கள் வீடுகளில் உள்ளார்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்” என்றனர்.
மாநகராட்சி சுகாதாரத் துறை மருத்துவர் ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
இப்பணியின் முக்கியத்துவம் கருதி எங்களுக்கு வரும் ஒவ்வொரு அழைப்புகளையும் சிறப்பு கவனம் செலுத்தி பார்த்து வருகிறோம். எனக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதம் இருந்தால் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறோம். அவர்களை ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டர்’ வைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம். இல்லாதவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
மூச்சுத்திணறல் ஏற்படுதல் உள்ளிட்ட அவசர தேவைகள் உள்ளவர்களை ‘ரெட் கேட்டகிரி’ என ஒதுக்கி, அவர்களுக்கு தேவையானஆம்புலன்ஸ் உதவி, மேல்சிகிச் சைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம்.
மாறாக மருத்துவமனை களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்களு டன் கலந்துரையாடும் போது தெரியவந்தால், எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறித்த தகவல்களை அளிக்கிறோம். எத்தகைய அழைப்பாக இருந்தாலும் அரை மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago