அம்மா உணவகத்தைப் பெயர் மாற்றாமல் பெருந்தன்மையோடு ஏற்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என, திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ க.செல்வராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சாலை நல்லூர் அம்மா உணவகத்தில், தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் இன்று (மே 19) ஆய்வு செய்தார். எம்எல்ஏ வருகையை ஒட்டி, அங்கிருந்த ஊழியர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அம்மா உணவகத்தில் சமையல் கூடத்தை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தோசை, இட்லி தயாரிக்கும் விதத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து, அம்மா உணவகத்தில் உணவு வாங்கக் காத்திருந்தவர்களுக்கு, டோக்கன் மற்றும் உணவும் வழங்கினார். இதையடுத்து, அம்மா உணவகத்தில் அவர் இட்லி சாப்பிட்டார்.
இதையடுத்து, எம்எல்ஏ க.செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டன. மலிவு விலையில் பசியாற வரும் மக்களுக்கு, இங்கு உணவு வழங்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் பெருந்தன்மையோடு, பெயர் மாற்றாமல் தொடர்ந்து அம்மா உணவகத்தை நடத்துகிறார். ஆகவே, பசியாற வருபவர்களுக்கு, ருசியோடு தரமான உணவு வழங்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago