ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் உள்ள 11 நோயாளிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனநல காப்பகப் பணியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடியில் உள்ள புகழ்பெற்ற தர்காவில் மனநோயாளிகளை விட்டுச்செல்வது சில காலத்திற்கு முன் வழக்கத்தில் இருந்தது.
2001 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் தர்காவுக்கு வெளியில் இருந்த மனநோயாளிகள் 28 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. கடந்த 2016ல் ஏர்வாடியில் அரசு மனநல காப்பகம் மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டது.
இந்த மையத்தில் 49 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில், இவர்களில் இரண்டு பேருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருவருக்கும் தொற்று உறுதியான நிலையில் மனநல காப்பகத்தில் இருந்த மற்ற நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அவர்களில் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனால், மொத்தம் 11 மனநல நோயாளிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனநல காப்பகப் பணியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து நேற்று வரை 2584 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை முதல் அலை தொட்டு தற்போதுவரை 151 பேர்.கரோனாவால் இறந்திருக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago