கோவையில் கரோனா உறுதியானவர்களில் 60.39 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்

By டி.ஜி.ரகுபதி

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 60.39 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, கோவையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 3,200-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்றைய (மே 17) நிலவரப்படி, 1.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஏறத்தாழ 1.01 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் தினமும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களில், மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் உள்ளனர். இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறும்போது, "கடந்த 7 நாட்களின் சராசரி நிலவரப்படி, மாவட்டத்தில் மொத்தமாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 60.39 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்.

இதில், பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 1.41 சதவீதம் பேர், மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 0.81 சதவீதம் பேர், வால்பாறை நகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 0.29 சதவீதம் பேர், சூலூர் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 9.79 சதவீதம் பேர், துடியலூர் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 5.60 சதவீதம் பேர், காரமடை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 2.43 சதவீதம் பேர், மதுக்கரை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 4.31 சதவீதம் பேர், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 1.14 சதவீதம் பேர், ஆனைமலை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 1.79 சதவீதம் பேர், தொண்டாமுத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 3.85 சதவீதம் பேர், அன்னூர் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 2.32 சதவீதம் பேர், கிணத்துக்கடவு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 1.51 சதவீதம் பேர், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 1.55 சதவீதம் பேர், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 1.91 சதவீதம் பேர், சுல்தான்பேட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் 0.92 சதவீதம் பேர் ஆவர்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்