காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் கூட்டணி குறித்து பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் பணிக்கு தமிழக காங்கிரஸ் தன்னை தயார்படுத்தி வைத்திருக்கிறது. தமிழகமெங்கும் காங்கிரஸ் நண்பர்கள் தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் கூட்டணி குறித்து பல்வேறு தவறான செய்திகள் கடந்த ஒரு வாரகாலமாக பரப்பப்பட்டன, யூகங்கள் இறக்கைக் கட்டி தமிழக தெருக்களில் பவனி வந்தன.
தேர்தல் பணி குறித்த ஆலோசனை செய்வதற்கு வருகிற 14.3.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்.
இதற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தாலும், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் இதனையே அழைப்பிதழாக ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்டத் தலைவர்கள், கூட்டத்திற்கு வருகின்றபோது தேர்தல் பணிகுறித்தும், தலைவர்கள் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் குறித்தும் ஆலோசித்து அதன் விவரங்களோடு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago